புதுடில்லி:ஆரோக்கிய சேது செயலியுடன், ஆயுஷ்மான் பாரத், ‘டிஜிட்டல்’ திட்டத்தை ஒருங்கிணைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும், ஆயுஷ்மான் பாரத், ‘டிஜிட்டல்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு துவங்கி வைத்தார். இத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவ அடையாள எண் தரப்படும்.இதன் வாயிலாக, மக்கள் தங்கள் மருத்துவ ஆவணங்கள், டாக்டர்களின் மருந்து சீட்டு, பரிசோதனை சான்றுகள் உள்ளிட்ட அனைத்தையும் டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைக்க முடியும். இந்நிலையில், இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை, ஆரோக்கிய சேது செயலியுடன் மத்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது. இதன் வாயிலாக, ஆரோக்கிய சேது செயலி பயனாளர்களும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் கீழ், 14 இலக்க மருத்துவ அடையாள எண்ணை பெற முடியும்.
புதுடில்லி:ஆரோக்கிய சேது செயலியுடன், ஆயுஷ்மான் பாரத், ‘டிஜிட்டல்’ திட்டத்தை ஒருங்கிணைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.