இந்திய வங்கிகளில் கடன் பெற்று திருப்பி தராமல் லண்டனுக்கு சென்ற மல்லையா, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது வாரிசுகளின் பெயருக்கு மாற்றினார். நீதிமன்ற உத்தரவை மீறியதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
பல முறை நேரில் ஆஜராக உத்தரவிட்டும், அவர் வராததை தொடர்ந்து, நேரில் ஆஜராவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாகவும் அதுவே கடைசி வாய்ப்பு எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வில், தனிப்பட்ட முறையிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ தனது நிலைப்பாட்டை முன்வைக்க மல்லையாவிற்கு இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்படுவதாகவும், அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்திய மக்கள் பலரும் மல்லையாவின் மீது அதிருப்தியில் உள்ள நிலையில், நீதி மன்றத்தின் இந்த கடைசி வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்வாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.