உக்ரைனில் பதட்டம் நீடிக்கும் நிலையில் பெலாரஸ் நாட்டில் ரஷியா போர் பயிற்சி

மின்ஸ்க்:

சோவியத் யூனியன் கடந்த 1991-ம் ஆண்டில் சிதறிய போது அதில் அங்கமாக இருந்த உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது.

தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.

உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்க நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உக்ரைன் எல்லை அருகே சுமார் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது.

இதனால் அந்த நாடு உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் ரஷியாவுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் அருகே உள்ள பெலாரசிஸ் அந்த நாட்டு படையினருடன் இணைந்து ரஷியா 10 நாள் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் சுமார் 30 ஆயிரம் ரஷிய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று அமெரிக்கா எதிர் பார்க்கிறது.

பெலாரஸ் போர் பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் தங்களது தலைநகர் கீவுக்கு மிக அருகில் ரஷிய வீரர்கள் குவிக்கப்படுவது உக்ரைனில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் வொலோதி மீர் செலென்ஸ்கி கூறுகையில், “எங்களது எல்லைக்கு அருகில் படையினரை குவிப்பதன் முலம் அண்டை நாடுகள் உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கின்றன” என்றார்.

ரஷியா-பெலாரஸ் கூட்டு ராணுவப் பயிற்சியின் மூலம் ஐரோப்பிய பிராந்தியம் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.