லக்னோ:
உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று நடைபெற்றது. கஸ்கஞ்ச் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பா.ஜ.க. கொடி உயரப் பறக்கிறது. இதனால் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
அயோத்தியில் பாரத ரத்னா பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் பிலிம் சிட்டியில் இசைக்காக லதா மங்கேஷ்கர் அகாடமியை அமைத்ததற்காக முதல் மந்திரி யோகியை வாழ்த்துகிறேன்.
எதிர்க்கட்சிகளின் படகுகள் மூழ்கத் தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையம் மீதும், வாக்குச்சாவடிகள் மீதும் குற்றம் சுமத்தத் தொடங்கி விட்டார்கள்.
உத்தர பிரதேச மக்கள் குண்டர் ராஜ்ஜியத்தை ஏற்க தயாராக இல்லை என்பதே உண்மை என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…கூடங்குளத்தில் அணு உலைக்கழிவுகளை சேமிக்க அனுமதிக்க கூடாது- வைகோ அறிக்கை