தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 10-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சூடுபிடிக்கும் 5 மாநில தேர்தல்கள்… வெற்றி நிச்சயம் எனக்கூறும் பிரதமர்… மக்கள் யார் பக்கம்?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.
K.Santhosh Kumar
5 மாநில தேர்தல்:
வெற்றி நிச்சியம்தான். அது தேர்தல் முடிவு காங்கிரஸ்-க்கா, AAP-க்கா, பிஜேபி-யா அல்லது மாநில கட்சிகளா என்று தெரியும்..
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..
ஹிஜாப் விவகாரம் பிஜேபிக்கு பின்னடைவு..
வலிமையான தலைமை இன்றி காங்கிரஸ்..
மாநில நலன் சார்ந்து மக்கள் தீர்ப்பு.
Farook Nagore
மக்களை மடைமாற்றும் மத அரசியலை விடுத்து மனிதம் போற்றும் மக்கள் பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்!!
Dr. Saami Ezhilan
இந்த முறை பாஜக எந்த மாநிலத்திலும் எளிதாக வெற்றி பெறாது. மக்களுக்காக எதையும் செய்யாத மோடி வெற்றி பெறுவோம் என்பது வேடிக்கை.
பிரபு கிரிஷ்
உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றி உத்திரவாதம்!
பஞ்சாப்பில் பாஜக வெற்றி பகல் கனவு!
மற்ற மூன்று மாநிலத்திலும் பாஜகவின் சமீபகால நடவடிக்கைகளால் கடும் போட்டியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!
ஆக,பிரதமர் வெற்றி நிச்சயம் பேச்சு வெற்று பேச்சாக அமையவே அதிக வாய்ப்புள்ளது!
தனி ஒருவன்
பிரதமருக்கு ஏமாற்றமே நிச்சயம்:
உத்திரப் பிரதேசம்−பாஜக!
பஞ்சாப்−ஆம்ஆத்மி!
உத்தராகண்ட்,மணிப்பூர்−காங்கிரஸ்!
கோவா−காங்கிரஸ்35%,பாஜக35%,ஆம்ஆத்மி20% மீதம் உள்ள 10% இடம் பிடிப்பவர்களே ஆட்சியை முடிவு செய்வார்கள்!
Raju D
நிறைய இடத்தில் EVM வேலை செய்ய வில்லை என்றும் இடையில் நிறைய இடத்தில் Programmed EVM கொண்டு மாற்ற பட்டது என்று பேரும் மக்கள் கொண்டளிப்பு.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM