ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி..!

கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி தன்னுடைய 8வது வெற்றியை பெற்றது.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி சார்பில் ஜேவியர் சிவேரியோ ஆட்டத்தின் 16வது நிமிடத்திலும் விக்டர் ஆட்டத்தின் 30வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். மேலும் பெங்களூரு அணி சார்பில் சுனில் ஷேத்ரி ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து ஐதராபாத் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.