சிக்கபல்லாபூர்-“கொரோனாவுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். சங்கடம் வரும் போது, ‘வெங்கடரமணா’ என கூற வேண்டும். மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற காரணத்தாலேயே, கொரோனா பூமிக்கு வந்தது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என கோடி சுவாமிகள் தெரிவித்தார்.சிக்கபல்லாபூரில், அவர் நேற்று கூறியதாவது:கொரோனா எப்படி இருந்தது என்பதற்கு கோவில்களின் கதவு மூடப்பட்டதே சாட்சியாக இருந்தது. பிரபலமான திருப்பதி, தர்மஸ்தலா, சாமுண்டேஸ்வரி கோவில்கள் மூடப்பட்டிருந்தன. மடங்களும் கதவை மூட வேண்டிய நிலை உருவானது.கொரோனாவுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். சங்கடம் வரும் போது ‘வெங்கடரமணா’ என கூற வேண்டும். மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற காரணத்தாலேயே, கொரோனா பூமிக்கு வந்தது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.கொரோனா ஆர்ப்பரிப்பு குறைந்தது என நினைத்த நிலையில், நந்தி மலையில் மண் சரிவு ஏற்பட்டது.மலை மஹாதேஸ்வரா மலை, மடிகேரி உட்பட, பல்வேறு இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. அது மட்டுமின்றி வெள்ளப்பெருக்குக்கு, கால்நடைகள், மனித உயிர்கள் பலியாகின.எதிர்வரும் நாட்களில், காற்றாலும் கூட கண்டம் ஏற்பட்டு, மக்களை வாட்டி வதைக்கும். ஒரு கஷ்டம் போனால், மற்றொரு கஷ்டம் வரும். விபரீதமான வறட்சி ஏற்பட்டு, உணவு, குடிநீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement