மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சுமார் 40 வருடகாலத்திற்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட கிரான் புலிபாய்ந்த கல் வீதி தொடக்கம் குடும்பிமலை வரையான சுமார் 38 கிலோமீற்றர் வரையான வீதிக்கான காபட் இடும் வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று (10) காலை கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் ஒரு இலட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ,கிரான் பிரதேச செயலக பிரிவில் மிக நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்ட வீதியினை மிக விரைவாக காபட் இட்டு புனரமைத்துத்தருமாரு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வீதி பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோ மற்றும் கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா அவர்களின் வழிநடத்தலின் கீழ் கிரான் பாலத்தில் இருந்து குடும்பி மலை வரை மற்றும் இலுப்படிச்சேனை சந்தியில் இருந்து கிரான் 5ம் கட்டை சந்தி வரையிலான 38 கிலோ மீட்டர் நீளமான வீதி 1,454 மில்லியன் ரூபா செலவில் காபட் இடும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
அங்குரார்ப்பண நிகழ்விழ் பிரதம அதிதிகளாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் மற்றும் 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த ஆகியோர் கலந்துகொண்டனர்..நிகழ்வில் சிறப்பு அதிதியாக தரவைக்குளம் இராணுவ முகாமின் பிரிக்கேடியர் றுவான் விஜயசூரிய கலந்துகொண்டார். அதிதிகளால் வீதிக்கான நினைவுப்படிகம் திரை நீக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டவர்களை அப்பகுதி கிராம மக்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்