சென்னை: தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் கீழடியின் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015ம் ஆண்டு 3 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 4 ஆம் கட்ட அகழாய்வில் இருந்து இது வரை 18,000-க்கும் அதிகமான பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தமிழர்கள் வரலாறு மிகவும் தொன்மையானது எனக் கண்டறிப்பட்டுள்ளது. இதனால் கீழடியில் தொடர்ந்து அகழாய்வுப் பணி நடத்தத் தொல்லியல் துறை நடைவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் இன்று தொடங்கவுள்ளனர்.
இந்தப் பணியினை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான தொடக்க விழா ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.