குழு அழைப்புகளுக்குத் தனி ரிங்டோன், அனிமேட் ஆகும் ஸ்டிக்கர்கள் என அடுத்தகட்ட அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது.
வாட்ஸ் அப் செயலியின் ஆண்ட்ராய்ட் பதிப்பில் சில புதிய அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக, வாட்ஸ் அப்பின் புதிய அம்சப் பரிசோதனைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் WABetainfo இணையதளம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பின் 2.20.198.11 பதிப்பில் இந்தப் புதிய அம்சங்கள் பயனர்களுக்குக் கிடைக்கும்.
அசைவின்றி இருக்கும் ஸ்டிக்கர்கள் ஏற்கெனவே வாட்ஸ் அப்பில் உள்ளன. தற்போது புதிய அப்டேட்டில் அனிமேட் ஆகும் ஸ்டிக்கர்கள் அறிமுகமாகவுள்ளன. குரல் அழைப்புகளுக்கான இடைமுகத் தோற்றமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனைத்து பட்டன்களும் திரையின் கீழ் பகுதிக்கு நகர்த்தப்படும்.
மேலும் குழு அழைப்புகளுக்கென தனி ரிங்டோன், தனியாக ஒரு கேமரா ஐகான் என இன்னும் சில புதிய அம்சங்களும் இந்த அப்டேட்டில் அறிமுகப்படுத்தவுள்ளன.