பனாஜி:
40 தொகுதிகள் அடங்கிய கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன.
பா.ஜ.க. சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிக்க காங்கிரஸ் அரசு 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது என தெரிவித்தார்.
இந்நிலையில், கோவாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அந்தக் கால வரலாறு அவருக்குப் புரியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கோவாவில் சுரங்கத்தை நிலையான மற்றும் சட்டப்பூர்வமான வழியில் மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
மக்களை திசைதிருப்பும் உரையாடலில் நான் ஈடுபடமாட்டேன். அவர்களுக்கு எது முக்கியம் என்பதில் எனது கவனம் உள்ளது.
இம்முறை அறுதிப் பெரும்பான்மை பெற்று, கோவாவில் ஆட்சி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…லிபியா பிரதமரை கொல்ல முயற்சி: காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு