தமிழகத்தில் 890 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இதுவரை தமிழகத்தில் 69 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 8,181 இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் கடந்த ஆண்டு வரை 3,628 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
