இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் ஏராளமான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் அவசியம். அங்கீகாரம் பகுதியளவிலும் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பி.இ, பி.டெக் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க இனி முழு அங்கீகாரம் அவசியம் என அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பகுதியளவில் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், இனி தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க ஏஐசிடிஇ-ன் முழு அங்கீகாரமும் அவசியம் என்றும் பகுதியளவு அங்கீகாரம் இனி வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. லாவண்யா தற்கொலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 14-ந்தேதி விசாரணை