புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6-ம் தேதி மும்பையில் மரணம் அடைந்தார். அவரது 75 ஆண்டு கால இசைப் பயணத்தை போற்றும்விதமாக மும்பையில் உள்ள கலினாவில் 2.5 ஏக்கர் நிலத்தில் இசைப் பள்ளி அமைக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்தது.
இதுகுறித்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே, சத்ரபதி சிவாஜி மகாராஜ் பூங்காவை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க நீண்ட காலமாக போராடி வருகின்றனர். தங்களின் அற்ப கட்சி அரசியலுக்காக பலி கொடுக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹிருதய்நாத் கூறியதாவது:-
மும்பை சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பாடகிக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்.
மாநில அரசு அறிவித்த இசைப் பள்ளி திறக்கும் முடிவே லதா மங்கேஷ்கருக்கு அளிக்கும் சிறந்த அர்ப்பணிப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
கேரளாவில் சப்-இன்ஸ்பெக்டரான ஆதிவாசி பெண் – தந்தையின் கனவை நனவாக்கியதாக உருக்கம்