மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை இந்திய பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையையும், வரி விதிப்பு மூலம் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கப்பட்டுக் கணக்கிட முடியும் என நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று பட்ஜெட் தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராஜ்யசபாவில் பதில் அளித்தார். அப்படி நிர்மலா சீதாராமன் கொடுத்த 10 முக்கியமான பதில்கள் மற்றும் விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
Budget 2022: நிர்மலா சீதாராமனுக்கு 3 முக்கிய சவால்.. சமாளிக்க முடியுமா..!!
கிரிப்டோகரன்சி தடை
இந்தியாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்வதா அல்லது தடை செய்யக் கூடாதா என்பது குறித்த முடிவுகள் இனி வரும் அரசின் ஆலோசனை கூட்டணிகளின் வாயிலாகவே முடிவு எடுக்கப்படும். மேலும் 30 சதவீத கேபிடல் கெயின்ஸ் வரி விதிக்கும் காரணத்தால் இந்தியாவில் கிரிப்டோகரன்சி அதிகாரப்பூர்வ முதலீடாக அங்கீகரிக்கப்படுவது இல்லை எனத் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி
இந்தியா பொருளாதாரம் மந்தமாகவோ அல்லது சரிவு பாதையில் இருப்பது குறித்த கேள்வி அவசியம் இல்லை, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 9.2 சதவீத உயர்வில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ரூ.2.32 லட்சம் கோடி
7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.1 லட்சம் கோடியாக இருந்த இந்திய பொருளாதாரம், தற்போது ரூ.2.32 லட்சம் கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதை இந்திய பொருளாதாரம் திரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருக்கிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பணவீக்கம்
2014 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பணவீக்கத்தின் 6% சகிப்புத்தன்மை வரம்பை (tolerance limit) 6 முறை மீறியுள்ளது. இதன் மூலம் பணவீக்கத்தைச் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்டு வலுவாக இருப்பதாக மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விவசாய உர மானியம்
விவசாய உரத்திற்கு அளிக்கப்படும் மானியம் 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 79,530 கோடி ரூபாயாக இருந்த நிலையில் ரூ 1.4 லட்சம் கோடியாக திருத்தப்பட்டு உள்ளது. இது மத்திய அரசு தேவைகளுக்கு ஏற்ப முடிவை எடுப்பதைக் காட்டுகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறை
சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது என நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2019-20ல் சுகாதாரத் துறைக்கு 64,000 கோடி ரூபாயில் இருந்து 2021-22ல் ரூ.85,950 கோடியாகவும், 2022-23ல் ரூ.86,606 கோடியாகவும் உயர்ந்துள்ளது எனத் தெரிவித்தார்.
MNREGA திட்டம்
MNREGA என்பது தேவைவை பொருத்து உந்தப்படும் திட்டமாகும், இத்திட்டம் மூலம் கிராமப்புறத்தில் மோசமான வர்த்தகம் வருமானம் கொண்ட காலத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர பெரிய அளவில் பயன்படுகிறது. இந்நிலையில் தேவையைப் பொருத்து இத்திட்டத்திற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என நிதியமைச்சர் கூறினார்.
சர்வதேச நிதி நெருக்கடிக் காலம்
2008-09 ஆம் நிதியாண்டில் சர்வதேச நிதி நெருக்கடி காலத்தின் போது நாட்டின் பணவீக்கம் 9.1% ஆக இருந்தது, ஆனால் கொரோனா தொற்று காலத்தின் போது நாட்டின் பணவீக்கம் அதிகப்படியாக 6.2% ஆக மட்டுமே இருந்த நிலையில் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான பாதிப்பு உருவானது எனப் பணவீக்கம் அளவீடுகள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நிதியமைச்சர்.
இழப்பு
இதேபோல் 2008-09 ஆம் நிதியாண்டில் சர்வதேச நிதி நெருக்கடி காலத்தின் போது இந்திய பொருளாதாரம் ரூ. 2.12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இழப்பை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் ரூ.9.57 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தது உள்ளது எனவும் தரவுகள் அளித்துள்ளார் நிதியமைச்சர்.
MSME நிறுவனங்கள்
இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட வேளையில் லாக்டவுன் காரணமாகச் சுமார் 67 சதவீத MSME நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன என மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வ தகவல்களை இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டு உள்ளார்.
ஜிடிபி அளவீடுகள் தேவை
ஒவ்வொரு முறையும் மத்திய அரசு 7 ஆண்டுகளுக்கு முந்தைய அளவீட்டை ஒப்பிட்டுக் காட்டுகிறது, ஆனால் அதை ஜிடிபி அளவில் காட்டினால் கட்டாயம் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்றைய நாணய மதிப்பு வேறு, விலைவாசி வேறு அதை ஒப்பிடுவது சரியாக இருக்காது. உதாரணமாகப் பெட்ரோல் டிசல் விலை, உணவு பொருட்கள் விலை, தங்கம் விலை, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
Nirmala Sitharaman’s reply to Budget 2022 discussion in Rajya Sabha
Nirmala Sitharaman’s reply to Budget 2022 discussion in Rajya Sabha பிட்காயின் தடையா..? நிர்மலா சீதாராமன் நறுக் பதில்.. அப்போ 30% வரி..?!