அமிர்தசரஸ்:
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.அவர் சாலை வழியே வாகனத்தில் சென்ற போது பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் தமது பயணத்தை பிரதமர் ரத்துச் செய்தார்.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலையொட்டி பிரதமரின் பஞ்சாப் பிரச்சார பயணம் குறித்து அம்மாநில காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
அவர்(பிரதமர்) வரவேற்கப்படுகிறார். அவர் விமானத்தில் வர வேண்டும். அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒவ்வொரு பஞ்சாபியையும் சாலையில் வைத்திருப்பதால் அவருக்கு இன்னும் சாலைப் பிரச்சினைகள் இருக்கும், அவர்கள் எப்படி மறப்பார்கள்? போராட்டத்தின் போது 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.
அவரது (பிரதமரின்) கார் சாலை வழியாக சென்றால் மக்கள் மனதில் கோபம் வரும்.அதனால் அவர்கள் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தலாம். எனவே அவர் ஹெலிகாப்டரை பயன்படுத்த வேண்டும். பிரதமர் ஹெலிகாப்டர் அல்லது விமானம் மூலம் பார்வையிடலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…
எதிர்க்கட்சிகளின் படகுகள் மூழ்கத் தொடங்கிவிட்டது – பிரதமர் மோடி பேச்சு