அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்திறன் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் தமிழ்மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்திறன் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் சிங்களப்பயிற்சியைப் பூர்த்தி செய்த கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி அந் நூர் மண்டபத்தில் இடம்பெற்றது.
மொழித்திணைக்களத்தின் போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழிப்பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.உமாசங்கர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.லஸந்த பண்டார, மொழித்திணைக்களத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் செல்வி ஜே.பி.பல்லவி, பாடநெறியின் பிரதேச செயலக இணைப்பாளர் பி.எம்.எம்.றாஸித், மொழித்திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.