பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொது வெளியில் கடுமையாக செயற்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு நடந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அமைச்சர் ரோஹித அபேவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது பிரதமர் மஹிந்த கோபமாக, ரோஹிதவின் கையை தட்டி விட்டார்.
மஹிந்தவின் கையை அமைச்சர் ரோஹித அபேவர்தண பிடிக்க சென்ற போது அதனை பிரதமர் கோபத்துடன் தட்டிவிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
ஒரு கையை மாத்திரம் மக்களுக்கு காட்டிய பிரதமரின் மற்ற கையும் தூக்கிவிட ரோஹித அபேவர்தன முயற்சித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் போது ரோஹிதவை திட்டிய மஹிந்த அதன் பின்னரும் திட்டியதாக தெரியவந்துள்ளது.
“சர் உங்கள் கைகள் இரண்டையும் மக்களுக்கு காட்ட வேண்டும் என்றே முயற்சித்தேன். சர் மீதான அன்பு காரணமாகவே நான் அவ்வாறு செய்தேன்” என ரோஹித கூறியதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.