பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து நான் கொஞ்சம் கூட பயப்படவில்லை. மாறாக அவரது பிடிவாத குணத்தைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது என்று
காங்கிரஸ்
தலைவர்
ராகுல் காந்தி
கூறியுள்ளார்.
பிரதமர்
நரேந்திர மோடி
, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். அதேபோல ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கும் ஒரு விரிவான பேட்டி அளித்திருந்தார். அனைத்திலும் அவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தி லோக்சபாவுக்கு சரியாக வருவதில்லை, விவாதங்களை சரியாக கவனிப்பதில்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமரின் பேச்சு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் உத்தரகாண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது பதிலளிக்கையில், பிரதமர் மோடி எப்போதுமே காங்கிரஸ் குறித்து மட்டுமே சிந்தித்து வருகிறார். எனக்கு மோடியைப் பார்த்து பயமே வருவதில்லை. மாறாக அவரது முரட்டுப் பிடிவாதத்தை நினைத்து சிரிப்புதான் வருகிறது.
சீனா குறித்து நான் கேட்ட கேள்விக்கு பிரதமர் என்ன பதில் சொன்னார், சொல்லவில்லை. ஏஎன்ஐக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ராகுல் எதையும் கவனிப்பதில்லை என்று கூறியுள்ளார் மோடி. அப்படி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா..? அமலாக்கப் பிரிவு, சிபிஐ என எதுவும் ராகுல் காந்திக்கு எதிராக வேலை செய்யவில்லை என்று அர்த்தம். என் மீது என்ன அழுத்தம் போட்டாலும் அதைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை, அதை நான் கவனிப்பதும் இல்லை.
நான் ஏன் நரேந்திர மோடி சொல்வதைக் கேட்க வேண்டும்? ரூபாய் நோட்டு தடை மூலமாக, ஜிஎஸ்டி மூலமாக நாட்டையே அழித்து விட்டார் மோடி. நாட்டின் சிறு தொழில் துறையினரை அழித்து விட்டார். விவசாயிகளை அழித்து விட்டார். தொழிலாளர்களை வதைத்து விட்டார். மோடிக்கு நான் பயப்படவில்லை, பயப்படவும் மாட்டேன். சிரிக்க மட்டுமே செய்வேன் என்றார் ராகுல் காந்தி.