Facing Oppn criticism on Budget, Sitharaman mocks Rahul Gandhi over ‘poverty a state of mind’ remark: 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஏழைகளுக்குப் போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2013 ஆம் ஆண்டு அவரின்“வறுமை என்பது ஒரு மன நிலை” என்ற கருத்தை நினைவு கூர்ந்தார். மேலும், அது தான் நான் சொல்ல வேண்டிய வறுமையா என்று கேலி செய்தார்.
ராஜ்யசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல், முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனத்தை எதிர்கொள்ள, ஏழைகளை ஒதுக்கிய பட்ஜெட் என்ற காங்கிரஸ் தலைவரின் ஏழ்மை குறித்த கருத்துகளை குறிப்பிட்டார்.
“தயவுசெய்து தெளிவாக இருங்கள், இது நான் சொல்ல வேண்டிய வறுமையா, மன வறுமையா?” என்று நிதியமைச்சர் கேட்டார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வரவு செலவுத் திட்டம் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதாகவும், வேலைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, நிர்மலா சீதாராமன் ஏழைகளை கேலி செய்கிறார் என்று எதிர்ப்பு தெரிவித்ததால், “நான் ஏழை மக்களை கேலி செய்யவில்லை. ஏழை மக்களை ஏளனம் செய்த நீங்கள் அவர் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
பலமுறை இடையூறுகளுக்கு மத்தியில், வறுமைக் கருத்துக்காக காங்கிரஸ் தலைவர்களை நிதியமைச்சர் விமர்சனம் செய்தார்.
“நீங்கள் எந்த ஏழ்மையைப் பற்றி பேசுகிறீர்கள்” என்று நிதியமைச்சர் கேட்டார்.மேலும், “உங்கள் முன்னாள் (காங்கிரஸ்) தலைவர் வறுமை என்பது உணவு, பணம் அல்லது பொருள் பற்றாக்குறையைக் குறிக்காது. தன்னம்பிக்கை இருந்தால், அதைக் கடக்க முடியும். அது (வறுமை) ஒரு மன நிலை என்று கூறியுள்ளார். நான் அந்த நபரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் அவர் யார் என்று எங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.
காட்சி தீவிரமடைந்து எதிர்ப்புகள் வெடித்ததால், நிதியமைச்சர் கருத்து ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதாகவும், காங்கிரஸ் தலைவரை மேற்கோள் காட்டுவதாகவும் கூறினார்.
ஒரு தமிழ் பழமொழியை மேற்கோள் காட்டி, நிர்மலா சீதாராமன் எந்த பெயரையும் கூறவில்லை என்று கூறினார், ஆனால் அனைவரும் அந்த நபரை பாதுகாக்க ஆரம்பிக்கின்றனர். “தமிழ்ப் பழமொழியின் தோராயமான மொழிபெயர்ப்பு என்னவென்றால் – மழைக் காலங்களில் தவளை எங்கே என்று யாருக்கும் தெரியாது, ஆனால் அது கூக்குரலிடும்போது அது எங்கே என்று தெரியும்.” (தவளை தன் வாயால் கெடும்)
இதற்கிடையில், “இந்தியா ‘அமிர்த காலத்தில் இல்லை, 2014 முதல் ராகுகாலத்தில் உள்ளது” என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
‘ராகு காலம்’ என்பது, சொந்தப் பிரதமரால் கொண்டுவரப்பட்ட அரசாணையை ஊடகங்கள் முன் கிழித்தபோது என்று (ராகுல் காந்தி சம்பந்தப்பட்ட 2013 சம்பவத்தைக் குறிப்பிட்டு) சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், ‘ராகு காலம்’தான் ஜி-23ஐ உருவாக்கியது என்று குறிப்பிட்டார்.
ஜி-23 என்பது கபில் சிபல் உட்பட 23 காங்கிரஸ் தலைவர்களைக் கொண்ட குழுவாகும், அவர்கள் காங்கிரஸ் தலைமை குறித்து கவலை தெரிவித்தனர்.
நிதியமைச்சர் காங்கிரஸ் கட்சியை மேலும் விமர்சிக்கும் விதமாக, “மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். அதுதான் ராகு காலம் என்று கூறினார்.
பிரியங்கா காந்தியின் ‘லட்கி ஹூன் லட் சக்தி ஹூன்’ என்ற முழக்கத்தில், காங்கிரஸ் கட்சியை கேலி செய்யும் வகையில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை நிதியமைச்சர் மேற்கோள் காட்டினார்.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இல்லாததால், அடிப்படை யதார்த்தம் தெரியவில்லை என்ற கூறிய, நிர்மலா சீதாராமன், “முன்னாள் பிரதமர் உட்பட அவர்களின் காலத்தில் இருந்த அனைத்து ராஜ்யசபா உறுப்பினர்களும் யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாக மதிப்பிற்குரிய உறுப்பினர் குறிப்பிட்டாரா?” என்று கேட்டார்.