ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் ஒமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வர வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் பழைய வட்டி விகிதத்தையே திரும்பவும் அறிவித்துள்ளது.
10வது முறையாக வட்டியை உயர்த்தாமல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள காரணத்தால் வங்கிகளும் கடன் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தியுள்ளது மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முக்கிய தகவல்.. சில்லறை பணவீக்கம் இனி இப்படித் தான்..!
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்ட முடிவுகளை நேற்று அறிவித்து நிலையில், இன்று சென்டரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் யூகோ வங்கி 2 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டியைத் திருத்தி அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பிற வங்கிகளும் இதுபோன்று அறிவிக்குமா என்று அச்சத்தில் உள்ளனர்.
சென்டரல் பேங்க் ஆப் இந்தியா
சென்டரல் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2.75 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதம் வரையில் நிர்ணயம் செய்துள்ளது. இப்புதிய வட்டி விகிதம் பிப்ரவரி 10, 2022 முதல் நடைமுறை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
சென்டரல் பேங்க் ஆப் இந்தியா வட்டி விகிதம்
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை – 2.75 சதவீதம்
15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை – 2.90 சதவீதம்
31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – 2.90 சதவீதம்
46 நாட்கள் முதல் 59 நாட்கள் வரை – 3.25 சதவீதம்
60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை – 3.25 சதவீதம்
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை – 3.80 சதவீதம்
180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை – 4.25 சதவீதம்
271 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை – 4.25 சதவீதம்
1 வருடம் முதல் 2 வருடங்களுக்குள் – 5.00 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.10 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 5.10 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை – 5.15 சதவீதம்
யூகோ வங்கி
சென்டரல் பேங்க் ஆப் இந்தியா-வை போலவே யூகோ வங்கியும் சில முக்கியமான வைப்பு நிதி திட்டத்திற்கு வட்டியை மறுசீரமைப்பு செய்துள்ளது. இவ்விரு வங்கிகளும் சில திட்டங்களின் வட்டியை குறைத்தாலும், சில திட்டங்களின் வட்டியை உயர்த்தியுள்ளது.
7 – 14 நாட்கள் – 2.55 சதவீதம்
15 – 29 நாட்கள் – 2.55 சதவீதம்
30 – 45 நாட்கள் – 2.80 சதவீதம்
46 – 60 நாட்கள் – 3.55 சதவீதம்
61 – 90 நாட்கள் – 3.55 சதவீதம்
91 – 120 நாட்கள் – 3.70 சதவீதம்
121 – 150 நாட்கள் – 3.70 சதவீதம்
151-180 நாட்கள் – 3.70 சதவீதம்
181 முதல் 364 நாட்கள் – 4.40 சதவீதம்
1 ஆண்டு – 5.10 சதவீதம்
1 வருடத்திற்கு மேல் – 2 வருடங்களுக்குள் – 5.10 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.10 சதவீதம்
3 – 5 ஆண்டுகளுக்குள் – 5.30 சதவீதம்
5 ஆண்டுகளுக்கு மேல் – 5.10 சதவீதம்
Central Bank of India and UCO bank revised FD interest rates after RBI kept rates unchanged
Central Bank of India and UCO bank revised FD interest rates after RBI kept rates unchanged ஆர்பிஐ வட்டி உயர்த்தவில்லை, ஆனா நாங்க உயர்த்துவோம்.. 2 வங்கி முடிவால் மக்கள் அதிர்ச்சி..!