சமீபத்தில் சிம்புவுடைய வொர்க் அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எடையைக் குறைத்து ஃபிட்டாக மாறிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வொர்க் அவுட் வீடியோ குறித்து சிம்பு ஃபிட்னஸ் கோச் சந்தீப் ராஜ் பகிர்ந்து கொண்டார்.
சிம்புவுடைய நண்பர் மகத் எனக்கு நல்ல பழக்கம். இவர் மூலமாகத்தான் சிம்புவுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். சிம்புகிட்ட முதல்ல பேசுனப்போ `ரொம்ப வெயிட் போட்டிருக்கோம்’னு வருத்தமா இருந்தார். முதல்ல, Physical பிட்னஸ் ஆக்ட்டிவிட்டி பண்ண ஆரம்பிச்சோம். எந்த மாதிரியான எக்சசைஸ் எப்படி பண்ணணும்னு சொல்லிட்டா போதும் சரியா சிம்பு அதை பாலோ பண்ண ஆரம்பிச்சிருவார். சரியான பார்முலா தெரிஞ்சிக்குவார். ஆர்கானிக் முறையிலதான் வெயிட் லாஸ் பண்ண ஆரம்பிச்சோம். ரொம்ப வலியும் தாங்குனார். முதல்ல வொர்க் அவுட் ஆரம்பிச்சு எட்டு கிலோ வரைக்கும் குறைச்சோம்.
இப்படியே படிப்படியா வெயிட் குறைச்சிக்கிட்டே வொர்க் அவுட் பண்றவங்களுக்கு புகைபிடிக்குற பழக்கம் இருக்கக்கூடாது. சிம்பு, இதெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா பாலோ பண்ணுனார். ரொம்ப க்ளியரா இருந்தார் ‘நோ மீன்ஸ் நோ’ பார்முலாவை பாலோ பண்ணுனார். எப்பவும் வெயிட் லாஸ் பண்ண அதிகநேரம் எடுக்கும். நூறுக்கு மேல இருந்த சிம்புவின் வெயிட் 85 வந்ததுக்கு அப்புறம் மத்த ஆக்ட்டிவிட்டி பண்ண ஆரம்பிச்சோம். நீச்சல், பாஸ்கேட் பால், பேட்மிட்டன், டென்னிஸ் எல்லாம் ட்ரெயினிங் சிம்பு எடுத்தார். ‘வெந்து தணிந்தது காடு’ படத்துல சிம்பு 65 கிலோ இருக்கார்.
சாப்பிடுற உணவு முறைகளும் சரியா இருக்கணும். சிக்கன், மட்டன்னு டயட் புட் பாலோ பண்ணுனோம். தவிர, கோதுமை சார்ந்த உணவுகளும் சிம்பு விரும்பி சாப்பிட்டார். வொர்க் அவுட் பண்ணிட்டு சாப்பிட முடியாத நேரங்கள்ல ஜூஸ் எடுத்துக்கிட்டார். வீட்டுல செஞ்ச சாப்பாடு மட்டுமே எடுத்துக்கிட்டார். நிறைய கீரையும் சேர்த்துக்கிட்டோம்.
கிட்டதட்ட எங்களுடைய பயிற்சிக்கு பல மாசங்கள் தேவைப்பட்டுச்சு. ஏதாவதொரு படத்துகாக வெயிட் லாஸ் பண்ணல. சிம்புவுடைய லைப் ஸ்டைல் மாற்றதுக்காக நடந்ததுதான்இது. இப்போ சிம்புவுடைய வெயிட்லாஸ் வீடியோ பார்க்குறப்போ இவருடைய ரசிகர்கள் எல்லாரும் எமோஷ்னலா பீல் பண்றாங்க. பார்க்க ஹேப்பியா இருக்கு. சிம்புவுடைய வொர்க் அவுட் வீடியோக்கு atman-னு பேர் வெச்சது சிம்புதான். ஏதுவா இருந்தாலும் ஆத்மா சம்பந்தப்பட்டதுனு சிம்பு நம்புவார். இதனால இந்த பேரை செல்கட் பண்ணுனார். ஒருநாள் கார்ல போயிட்டிருந்தப்போ என்ன பேர் வைக்கலாம்னு பேச்சு வந்தது. அப்போ, சிம்புதான் இந்தப் பெயரை சொன்னார்.