உலகம் முழவதும் இன்னும் நிலைமை சீரடையவில்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். ஏனெனில் சர்வதேச அளவில் பொருளாதாரம் என்பது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் கொரோனா அதன் வேலையை சிறப்பாக செய்து கொண்டுள்ளது.
3 நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி அப்பளை பண்ணுங்க.. !
கொரோனாவின் வருகைக்கு பிறகு சில துறைகளில் பணி நீக்கம் என்பது இருந்தாலும், வேலையிழப்பு இருந்து வந்தாலும், பல துறைகளில் வேலை விகிதமும் அதிகரித்துள்ளது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இன்னும் சில துறைகள் வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

பணி நீக்கம்
நிலவி வரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்காவினை சேர்ந்த உடற்பயிற்சி கருவிகள் உற்பத்தி செய்யும் பெலோட்டன் நிறுவனம், அதன் வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றது. உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 2800 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்காவில் இருந்த ஆலையை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CEO ராஜினாமா
அது மட்டும் அல்ல, இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தனது பணியினை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெலோட்டன் அதன் வளர்ச்சி விகிதத்தினை தக்க வைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், இத்தகைய முடிவுகளை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கடுமையான கட்டுப்பாடுகள்
கொரோனாவின் வருகைக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் பல நாடுகளிலும் இருந்து வருகின்றது. அத்தியாவசியம் அல்லாதவைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சினிமா தியேட்டர்கள், ஜிம்கள், கிளப்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக பெலோட்டன் அதன் வாடிக்கையாளர்களின் இழப்பினை கண்டுள்ளது

ஆர்வம் சரிவு
வாடிக்கையாளர்களின் ஆர்வமானது குறைந்துள்ளது. இதனால் பெலோட்டனின் வளர்ச்சி விகிதம் சரிவினைக் கண்டுள்ளது. எப்படியிருப்பினும் வாடிக்கையாளர்கள் சேர்க்கை விகிதமானது இப்போதும் அதிகரித்த வண்ணமே உள்ளது. வருவாய் 6% அதிகரித்து, 439 மில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.

பெலோட்டன் அதிரடி திட்டம்
20% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள பெலோட்டன், 2023ம் ஆண்டில் ஓஹியோவில் உள்ள அதன் ஆலையை மூட திட்டமிட்டுள்ளது. மேலும் நிறுவனம் சொந்தமாக இயக்கி வந்த கிடங்குகள் மற்றும் விநியோக குழுக்களைக் குறைத்து, மாறாக மூன்றாம் தரப்பு நபர்களுடன் வணிக ஒப்பந்தங்களை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றது. இதன் மூலம் ஆண்டுக்கு 800 மில்லியன் டாலர் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

முக்கிய மாற்றம்
பெலோட்டனின் தலைமை செயல் அதிகாரியான ஜான் போலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனினும் அவர் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக இருப்பார் என்றும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில் ஸ்பாட்டிபை மற்றும் நெட்பிளிக்ஸின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான பேரி மெக்கார்த்தியை, நிறுவனத்தினை வழி நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தெளிவான பாதை
எங்களின் நோக்கம் தெளிவாக உள்ளது. லாபத்தினை அடைய தெளிவான பாதையை நிறுவவும், நிலையான வளர்ச்சியினை மேம்படுத்தவும் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெலோட்டன் நிறுவனம் அமெரிக்காவினை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இது உடற்பயிற்சி மற்றும் உபகரணங்கள் உற்பத்தி செய்யும் ஒரு பிரபல நிறுவனமாகும்.
peloton’s plans to lay off 2800 employees in worldwide
peloton’s plans to lay off 2800 employees worldwide/2800 பேர் பணி நீக்கம்.. CEO ராஜினாமா.. பெலோட்டனில் அதிரடியான பல மாற்றங்கள்..!