Airtel down: முடங்கிய ஏர்டெல் சேவை.. தவித்து போன பயனர்கள்..தற்போதைய நிலவரம் என்ன..!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பர்தி ஏர்டெல்லின் நெட்வொர்க் சேவைகள் பல இடங்களில் முடங்கியுள்ளது.

இது குறித்து பல தரப்பில் இருந்தும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக ஏர்டெல்லின் இணைய சேவைகள் மும்பை, டெல்லி போன்ற மெட் ரோ நகரங்களில் பாதிகப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர்டெல் வாடிக்கையாளர்களே உஷார்.. மீண்டும் கட்டண உயர்வாம்.. பர்ஸ் காலி..!

ஏர்டெல் சேவைகள் முடக்கம்

ஏர்டெல் சேவைகள் முடக்கம்

இன்று காலை முதல் கொண்டே மும்பை, டெல்லி, நொய்டா போன்ற மெட்ரோ நகரங்களில், ஏர்டெல்லின் 4ஜி சேவை, வைஃபை சேவை, நிறுவனங்களுக்கான பிராண்ட்பேன்ட் சேவைகள் இன்று காலை 11.30 மணி முதல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தான் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ட்விட்டரில் தங்களது பிரச்சனை குறித்து புகார் தெரிவித்தும் வந்தனர்.

APP-லும் பிரச்சனை

APP-லும் பிரச்சனை

மேலும் ஏர்டெல்லின் ஆப்பினையும் பயன்படுத்த முடியவில்லை என குற்றச்சாட்டுகள் இணையத்தினை வலம் வந்து கொண்டுள்ளன.

இதனை தொடர்ந்து ஏர்டெல் சேவையில் ஏற்பட்ட பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகள் மீட்பு

சேவைகள் மீட்பு

இது குறித்து ஏர்டெல் நிறுவன, தொழில் நுட்ப கோளாறு காரணமாக எங்கள் இணையச் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. ஆனால் தற்போது முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் டிரெண்டிங்
 

ட்விட்டரில் டிரெண்டிங்

இதற்கிடையில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் சேவையில் ஏற்பட்ட முடக்கம் குறித்து பரவலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் மீம்ஸ்களையும் போட்டு வருகின்றனர். இதற்கிடையில் ட்விட்டரில் #Airteldown என்ற ஹேஷ்டேக் பரவலாகி வருகின்றது.

ஆமைபோல வேகம்

ஆமைபோல வேகம்

ட்விட்டரில் பயனர் ஒருவர் எப்போது எனக்கு இணையத்தில் முக்கியமாக டவுன்லோடு செய்ய வேண்டியிருந்ததோ, அப்போது ஆமை வேகத்தில் இண்டர்நெட் வேகம் இருந்தது என கூறியுள்ளார்.

ஏர்டெல் Vs ஜியோ

ஏர்டெல் Vs ஜியோ

மற்றொரு பயனர் ஒருவர் ஏர்டெல்லையும், ஜியோவினையும் ஒப்பிட்டு கேலி செய்து ஒரு இமேஜினை பதிவு செய்துள்ளார்.

ஏடெல் ஊழியர்கள்

ஏடெல் ஊழியர்கள்

ஏர்டெல் சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் ஏர்டெல் இன்ஜினியர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

#Airtel down:Airtel faces major service outage across india

#Airtel down:Airtel faces major service outage across india/Airtel down: முடங்கிய ஏர்டெல் சேவை.. தவித்து போன பயனர்கள்..தற்போதைய நிலவரம் என்ன..!

Story first published: Friday, February 11, 2022, 15:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.