Petrol and Diesel Price: சென்னையில் 99-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: நீட் ஒழிப்பிற்கான ரகசியமே பாஜகவிற்கு அடிமையாக இல்லாமல் இருப்பது தான் என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
India News Update: மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பறிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். ஆளுநரிடம் இருந்து நீட் தேர்வு விலக்கு மசோதா கிடைக்கப்பெற்ற பிறகு குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குவாட் உச்சி மாநாடு: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
Cricket News Update: இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் ஆட்டம் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
Corona update: உலகளவில் இதுவரை 40.60 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 32.58 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 58.07 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
நீதிபதி கலையரசன் விசாரணை குழுவுக்கு எதிராக சூரப்பா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
நெல்லையில் காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் “சி.இ 20 கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.
கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அரியலூர் கங்கைகொண்ட சோழபுரத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.
சத்தியமங்கலத்தில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் ஆயிரக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
கேரளாவில் மலை இடுக்கில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
கும்பகோணம் மாவட்டமாக உருவாக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.