கொரோனா காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைகளை நிறுத்தி வைத்திருந்தாலும், 2வது அலைக்குப் பின்பு அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான சலுகைகளை மத்திய அரசு அளித்தது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயர்ந்தது.
இந்நிலையில் மோடி அரசு மீண்டும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டு அதற்கான ஆலோசனையில் இறங்கியுள்ளது. புதிய சம்பள உயர்வு திட்டம் நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதம் 8000 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அரசு அறிவித்த லாக்டவுன்.. 14 வருட உச்சத்தில் அலுமினியம் விலை.. என்ன நடக்குது..?!
மோடி அரசு
இந்தியாவில் 5 மாநில தேர்தல் பல மாற்றங்களைக் கொண்டும் வரும் என்பதால் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக மோடி அரசு சில முக்கியத் திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு.
DA உயர்வு
கொரோனா காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்த்தப்பட்ட நிலையில் அனைத்து ஊழியர்களின் சம்பளமும் உயர்ந்தது. இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குழந்தைகளுக்கான கல்வி கொடுப்பனவிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.
fitment factor அளவு
இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அமைப்புகள் கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்யும் fitment factor அளவை 2.57 இல் இருந்து 3.68 ஆக உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. fitment factor உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் மொத்தமாக உயர்வும்.
குறைந்தபட்ச சம்பள அளவு
இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் அமைப்புகள் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 18000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதில் மத்திய அரசு fitment factor உயர்த்தும் கோரிக்கையைத் தற்போது ஆய்வு செய்து வருகிறது.
8000 ரூபாய் உயர்வு
தற்போது மத்திய அரசு fitment factor அளவீட்டை 2.57ல் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்வதோடு, DA, உடன் பிற அனைத்து கொடுப்பனவும் அதிகரிக்கும். இதனால் ஒரு ஊழியரின் சம்பளம் 8000 ரூபாய் வரையில் உயர வாய்ப்பு உள்ளது.
7வது சம்பள கமிஷன்
சமீபத்தில் தான் மோடி அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கான DA அளவீட்டை ஜனவரி 2021, ஜூலை 2021 என இரண்டு முறை அதிகரித்து 31 சதவீதமாக உயர்த்தியது. இதனால் அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயர்ந்தது. இந்நிலையில் மீண்டும் சம்பளம் உயர்வும் fitment factor-ஐ கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.
7th Pay Commission: Central Govt Employees may get salary Hike through fitment factor, DA
7th Pay Commission: Central Govt Employees may get salary Hike through fitment factor, DA அரசு ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. விரைவில் சம்பள உயர்வு..! #7thPayCommission