பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூரில், பாஜக சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி,“100 ஆண்டுகளில் இல்லாத மோசமான சுகாதார நெருக்கடியான, கொரோனா தொற்றை எதிர்கொண்டபோதிலும், பாஜக அரசாங்கம் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது. பெருந்தொற்றுக் காலத்தில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபரைக்கூட வெறும் வயிற்றுடன் நாங்கள் உறங்கவிடவில்லை.
கொரோனா காலத்தில் தடுப்பூசிக்கு எதிராகப் பொய்ப் பிரசாரம் செய்தது காங்கிரஸ். மறைந்த முன்னாள் தலைமைத் தளபதி பிபின் ராவத் பற்றி காங்கிரஸ் கட்சி அவமதித்துப் பேசியது. வரும் 14-ம் தேதி சட்டபேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Also Read: “தேர்தலில் வெற்றிக்குப் பின் பொது சிவில் சட்டம்..!” – உத்தரகாண்ட் பாஜக முதல்வர்