கடலில் தத்தளிப்போரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் சோதனை ஓட்டமானது பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.
சென்னையில் கூட்டங்களை கண்காணித்து குற்றங்களை குறைப்பதற்காகவும், கடற்கரையில் பாதுகாப்பு பணியை பலப்படுத்தவும் ரூ.3.6 கோடி மதிப்பில் 9 ஆளில்லா விமானங்கள் தமிழக காவல்துறையால் வாங்கப்பட்டது. மூன்று வகையான ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) வாங்கப்பட்டுள்ளது.
Quick response என்ற வகையில் உடனடியாக உதவுவதற்கு ஏதுவாக HD கேமராக்கள் மற்றும் இரவு நேரமும் காட்சிகளை பதிவு செய்யும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்ட 2 கிமீ தூரத்துக்கு 30 நிமிடம் தொடர்ந்து பறக்கும் 6 ஆளில்லா விமானமும் (ட்ரோன்), நீண்ட தூரத்தை கண்காணிக்கும் வகையில் சுமார் 100 நிமிடங்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று கண்காணிக்கும் வகையில் வசதிகளை கொண்டது. 2 ஆளில்லா விமானமும் மற்றும் அதிக திறன் கொண்ட அதிக எடையை தூக்கி பறக்கும் வகையில் சுமார் 15 நிமிடங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் பறக்கும் வகையில் அமைப்புடைய 1 ஆளில்லா விமானம் வாங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொடர்ந்து மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் குளிக்க சென்று பலர் நீரில் மூழ்கி பலியாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதனால், அவர்களை உயிருடன் மீட்பதற்காக, கடலில் தத்தளிக்கும் போது லைப் ஜாக்கெட் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் சோதனை ஓட்டமானது பெசன்ட் நகரில் நடைபெற்றது. ட்ரோன் மூலமாக கண்காணிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM