சட்டசபை தேர்தலில் திமுக கொடுத்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது என கரூரில் பாஜக தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வேலாயுதம்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார் அப்போது.
பொங்கல் தொகுப்பை உருப்படியாக கொடுக்க முடியாதது தமிழக அரசு. ஆனால், கடைகோடி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தியது மத்திய அரசு. தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகள் திமுகவினருடையது. நீட் மூலம் சாதாரண மக்களின் குழந்தைகள் மருத்துவம் படிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளியில் படித்த 545 மாணவர்கள் நீட் மூலம் மருத்துவ சீட் கிடைக்க வழி கிடைத்துள்ளது. இன்னும் 4 வருடம் திமுக ஆட்சி இருக்குமா என்பது அவர்களது கையில் உள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் எனக்கு 67 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. இது பாஜகவுக்கு. கிடைத்த வெற்றி.
கருணாநிதியின் அதே டெக்னிக் மூலம் கதை, வசனம் எழுதி ஆட்சி நடத்தி வருகிறார் ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் திமுக 517 வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால், 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM