ராய்ப்பூர்:
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் பசகுடா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த புத்கல் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என சி.ஆர்.பி.எப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மத்திய ரிசர்வ் போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, சி.ஆர்.பி.எப். போலீசாரை நோக்கி நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 168-வது பட்டாலியனைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். வீரர் ஒருவர் காயமடைந்தார் என பஸ்டார் நகர ஐ.ஜி. சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…கோவா விடுதலை பெற நேரு சரியான நேரத்தில் தலையிட்டார்: ப.சிதம்பரம்