உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலையொட்டி அம்மாநில பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அசாம் முதமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பேசியதாவது:
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரம் வேண்டும் என்று ராகுல் காந்தி கோரினார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகனா இல்லையா என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டிருக்கிறோமா?
மறைந்த ஜெனரல் பிபின் ராவத் தலைமையில் பாகிஸ்தானில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் கூறுகிறது. ஆயுதப் படையிடம் ஆதாரம் கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பிபின் ராவத்தை நீங்கள் நம்பவில்லையா? இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக பதில் அளித்தது. செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர், ஹிமந்த பிஸ்வா சர்மா சுயநினைவை இழந்து விட்டார்.
ராகுல் காந்தி ஒருபோதும் ராணுவத்தை கேள்வி கேட்கவில்லை. அவரது குடும்பத்தினர் இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர் (பிஸ்வா சர்மா) மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்… இவ்வாறு எம்பி மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்… கோவாவில் இம்முறை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் – ராகுல் காந்தி