சென்னையில் இருந்து எந்த ஊருக்கு செல்ல இருக்கிறது புல்லட் ரயில்? அறிக்கை தயார்!

சென்னை – பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
டெல்லி – வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்ளிட்ட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்கவும் ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.
image
மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி – அகமதாபாத், டெல்லி – அமிர்தசரஸ், வாரணாசி – ஹவுரா நகரங்களை இணைக்கும் வகையிலும் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.