டாக்சி ஓட்டுநர் இறப்பில் திடீர் திருப்பம்.. விஷ ஊசி செலுத்தி கொலை செய்தது அம்பலம் !

மர்மமான முறையில் கால் டாக்ஸி ஓட்டுனர் உயிரிழந்த விவகாரத்தில், விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.  

கோவையில் உள்ள வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் டாக்சி ஓட்டுனர் சனு என்பவர் கடந்த 9ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதால், விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் மற்றும் சக டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது உடலைவாங்க மறுப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது உடலை உறவினர்கள் நேற்று பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் 8ஆம் தேதி தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் சனுவின் டாக்ஸியில் பயணித்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

police light

ஸ்டீபனிடம்  நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக அவரும் அவரது மனைவி அமலோற்பவம் சேர்ந்து ஓட்டுநரை கொலை செய்ததும் அம்பலமானது. மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, சனுவை ஸ்டீபன் வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் கட்டையால் அடித்தும் விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் கணவன், மனைவி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய தடி, 6,100 ரூபாய் பணம், லேப்டாப் 20 க்கும் மேற்பட்டது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

police light

இதனிடையே, இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே இது போன்ற விஷ ஊசி செலுத்தி கொலை செய்த இரண்டு கொலை வழக்குகள், ஆயுத வழக்கு ஆகியவை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இருவர் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளனர். 

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.