நர்சரி, மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி – பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து, மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
image
கொரோனா ஊரடங்கு உத்தரவு வரும் 15-ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கூடுதல் தளர்வுடன் கொரோனா பொதுமுடக்கத்தை நீட்டிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
image
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நர்சரி, மழலையர் பள்ளிகளை திறக்கவும், பொருட்காட்சிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில்,சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல,திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 200 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 100 பேர் வரை அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.