வரும் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள Born Electric எஸ்யூவி கார்களின் டீஸரை முதன் முறையாக மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மஹிந்திரா அட்வான்ஸ் டிசைன் ஐரோப்பா (Mahindra advance design Europe – MADE) பிரிவின் தலைவர் பிரதாப் போஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள டிசைன் வடிவமைப்புகளை கொண்ட மின்சார எஸ்யூவி ஆனது விற்பனைக்கு அடுத்த சில ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளியிடப்பட்டுள்ள Born EV டீசரில் மூன்று கார்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று காம்பேக்ட் எஸ்யூவி மற்றொன்று நடுத்தர ரக எஸ்யூவி, மூன்றாவது கூபே உயர்தர மாடலாகவும் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனேகமாக இந்த மாடல்களின் பெயர்கள் எக்ஸ்யூவி 900 கூபே மற்றும் எக்ஸ்யூவி 700 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Born எலெக்ட்ரிக் காரின் டிசைன் வடிவமைப்பு பொருத்தவரை மிக நேர்த்தியான மற்றும் நவீன காலத்தில் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்கள் கொண்டுள்ள டிசைன் அம்சங்களை கொண்டதாக எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் C – வடிவ சிக்னேச்சர் கொண்ட எல்இடி லைட்டுகள் முன்புறத்தில் பின்புறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன மற்றபடி வேறு எந்த விபரங்களும் தற்போது வரை இந்த காரை பற்றி வெளியாகவில்லை. மேலும் தொழில்நுட்ப சார்ந்த அம்சங்களும் தற்பொழுது கிடைக்கப் பெறவில்லை.