புதுடில்லி: போலீஸ் துறையில் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள பார்லிமென்ட் குழு, மாவட்டத்திற்கு ஒரு பெண்கள் மட்டுமே பணிபுரியும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை அமைச்சகம் தொடர்பான பார்லிமென்ட நிலைக்குழு கடந்த வாரம் அறிக்கை அளித்தது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள போலீஸ் துறையில், பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. தற்போது10. 3 சதவீதம் பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.ஒவ்வொரு மாவட்டங்களிலும் பெண்கள் மட்டுமே பணிபுரியும் மகளிர் போலீஸ் ஸ்டேசன்களை அமைக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்ய வேண்டும். அதில், குறைந்தது 3 பெண் சப் இன்ஸ்பெக்டர்கள், 19 பெண் ஏட்டுகள் பணிபுரிய வேண்டும். பெண்கள் உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படவும் பரிந்துரை செய்ய வேண்டும்.
போலீசில் பெண்களின் பங்கு அதிகரிக்கும் அதே நேரத்தில், பெண்களுக்கு முக்கிய பணி வழங்கும் பாதுகாப்பு படையினரை முன்மாதிரியாக எடுத்து கொண்டு, போலீஸ் துறையிலும் பெண்களுக்கு சவாலான மற்றும் முக்கியமான பணிகளை வழங்கவும் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement