கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது சுகாதாரத் துறையினரை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஒமைக்ரான் பரவல் காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதை அடுத்து கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, தெற்கு குவாங்டாங் மாகாணத்திற்கு மத்திய மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் விரைவில் வர உள்ளனர்.
பூமியை தாக்கும் சூரிய புயல் – உலகமே இருளில் மூழ்கும் அபாயம்?
சீனாவின் பூஜ்ஜிய கொரோனா கொள்கையை நிலைநிறுத்தாதற்கு கடந்த வாரம்
ஹாங்காங்
நிர்வாகத்தை சீன அரசு கடுமையாக விமர்சித்து இருந்தது. இதற்கிடையே, ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.