சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற CBR150R பைக்கினை இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வெளியிடும் நோக்கில் டிசைன் அம்சத்திற்க்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.
CBR150R சிறப்பான ஸ்போர்ட் பைக் போல் அமைந்துள்ள கூர்மையான ஃபேரிங் பேனல், கூர்மையான பேனலுடன் கூடிய எரிபொருள் டேங்க் மற்றும் டெயில் பகுதி மேல்நோக்கி உள்ளது. அனைத்தும் LED லைட்டிங் மற்றும் ரிவர்ஸ் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.
சேஸ்ஸைப் பொறுத்தவரை, CBR150R ஆனது USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக் மூலம் டைமன்ட் சட்டத்தைப் பயன்படுத்துகிறது. இந்த பைக்கில் 149.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு எஞ்சின் 17.1 எச்பி பவர் மற்றும் 14.4 என்எம் டார்க்கை உருவாக்குகிறது.
இந்தியீவில் விற்பனையில் உள்ள யமஹா R15 V4 பைக்கிற்க்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ளது. அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.