மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என்று சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபகாலமாக மொபைல் ஆப் மூலம் வட்டிக்கு கடன் கொடுத்து அதிக வட்டி வசூலிக்கும் கும்பல் பெருகி வருகிறது. கடந்த ஆண்டு இது போல ஒரு மோசடி கும்பல் கைது செய்யப்பட்டது. இது போன்ற செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய நிலையில் ப்ளே ஸ்டோர் மற்றும் சமூக வலைதளங்களில் அதுபோல கடன் கொடுக்கும் செயல்கள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது கடன் வாங்கும் தொகையில் 30 சதவீதத்தை கட்டணமாக வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
அத்துடன் அந்த செயலியின் மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அபகரிக்கப் படுகின்றது. அவர்கள் கடனைச் செலுத்தாத பட்சத்தில் கடன் பெற்றவர்கள் குறித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆபாசமாகவும் தகாத முறைகளும் குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இது பலரையும் தற்கொலைக்கு தூண்டும் விதமாக இருக்கிறது. எனவே மக்கள் இந்த கும்பலிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மொபைல் ஆப் மூலம் கடன் பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.