உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வும் அதன் தலைவருமான எலான் மஸ்க் பல ஆண்டுகளாகக் கிரிப்டோகரன்சியை ஆதரித்து வரும் நிலையில் டெஸ்லா நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பும் நேரடியாகப் பிட்காயினை வாங்கியது.
3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..!
இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா எவ்வளவு பிட்காயினை வைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டெஸ்லா நிறுவனம்
டெஸ்லா நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையமான அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) சமர்ப்பித்துள்ள அறிக்கையில் டிசம்பர் 31ஆம் தேதி முடிவில் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயின் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

SEC அமைப்பு
டெஸ்லா நிறுவனம் பல பிரிவுகளில் முதலீடு செய்துள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டு நிறுவனத்தின் சொத்து விபரத்தைச் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அப்படி டெஸ்லா SEC அமைப்பிற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் டிசம்பர் 31, 2021 வர்த்தக முடிவில் சுமார் 1.99 பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயின் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பிட்காயின்
பிட்காயின் மதிப்பு சர்வதேச சந்தையில் நவம்பர் மாதத்தில் இருந்து மிகவும் மோசமான வகையில் சரியத் துவங்கியது, இதனால் டிசம்பர் 31 நிலவரத்தில் டெஸ்லா-வின் பிட்காயின் மதிப்பு சற்று குறைவாக உள்ளது. பிட்காயின் 2022ஆம் ஆண்டில் கணிசமாக உயர்ந்தாலும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

நஷ்டம்
மேலும் டெஸ்லா நிறுவனம் பிட்காயின் மீது செய்துள்ள முதலீட்டின் மூலம் 128 மில்லியன் டாலர் லாபத்தைப் பெற்றாலும், வருடத்தின் முடிவில் பிட்காயின் விலை சரிவால் 101 மில்லியன் டாலர் இழப்பை எதிர்கொண்டு உள்ளது. இதன் மூலம் 27 மில்லியன் டாலராக இருந்தாலும் மறுசீரமைப்பு மற்றும் இதர செலவுகள் மூலம் இந்த லாபம் நஷ்டமாக மாறியுள்ளது என டெஸ்லா தெரிவித்துள்ளது.

1.5 பில்லியன் டாலர் ஒதுக்கீடு
டெஸ்லா நிறுவனம் பிப்ரவரி 2021ல் பிட்காயின் வாங்குவதற்காக 1.5 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்தது, இதன் மூலம் தற்போது டெஸ்லா சுமார் 43,200 பிட்காயின்களை வைத்துள்ளது. டெஸ்லா 2021ல் பிட்காயினைப் பெற்று டெஸ்லா கார்களை விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா வைத்துள்ள 1.99 பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயின் இன்றைய ரூபாய் மதிப்பில் 15,068 கோடி ரூபாய்.

கிரிப்டோகரன்சி விலை
பிட்காயின் – 43,413.46 டாலர்
எதிரியம் – 3,095.78 டாலர்
டெதர் – 1.00 டாலர்
பினான்ஸ் காயின் – 417.82 டாலர்
USD காயின் – 1.00 டாலர்
ரிப்பிள் – 0.81 டாலர்
கார்டானோ – 1.16 டாலர்
சோலானோ – 105.64 டாலர்
அவலான்சி – 89.79 டாலர்
டெரா – 53.61 டாலர்
போல்காடாட் – 20.53 டாலர்
டோஜ்காயின் – 0.15 டாலர்
பினான்ஸ் USD – 1.00 டாலர்
ஷிபா இனு – 0.00003114 டாலர்
பாலிகான் – 1.87 டாலர்
Elon musk’s Tesla holds nearly $2 billion worth of Bitcoin, SEC filings
Elon musk’s Tesla holds nearly $2 billion worth of Bitcoin, SEC filings ரூ.15,068 கோடிக்கு பிட்காயின் வாங்கிய டெஸ்லா.. எல்லாம் எலான் மஸ்க் செயல்..!