புதுடில்லி : ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும், பிரதமர் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான பயனாளிகளை அடையாளம் காண்பதற்காக, உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள ரேஷன் கார்டு விபரங்கள் மற்றும் பயனாளிகளின் ஆதார் விபரங்களை மத்திய அரசு கோரியுள்ளது.
‘நிடி ஆயோக்’ ‘அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு அதை பயன்படுத்தலாம்’ என, அச்சப்படும் பெரும்பாலான மாநில அரசுகள், அந்த தகவல்களை தர மறுத்துள்ளன.நாடு முழுதும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு இலவச ரேஷன் மற்றும் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக ரேஷன் கார்டுகளுடன், ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்கள் மாநில அரசுகளிடம் உள்ளன.ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டம், 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ், 10.74 கோடி மக்கள் பயனடைவர் என, கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த, ‘நிடி ஆயோக்’ எனப்படும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, 40 கோடி மக்களுக்கு இந்த வசதி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்தும் தேசிய மருத்துவ ஆணையம், கூடுதல் பயனாளிகளை அடையாளம் காணும் வகையில், ரேஷன் கார்டு கள் மற்றும் ஆதார் விபரங்களை சேகரித்து தரும்படி, மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறையின் உதவியை நாடியுள்ளது.
இந்தத் தகவல்களை, 2011ல் எடுக்கப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு விபரங்களுடன் சேர்த்து, காப்பீட்டு திட்டத்துக்கான பயனாளிகளை அடையாளம் காண, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டிருந்தது.சந்தேகம்அதன்படி, மாநில அரசுக்கு மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால் பெரும்பாலான மாநிலங்கள்,
இந்தத் தகவல்களை தருவதற்கு மறுத்துள்ளன.இந்தத் தகவல்களை மத்திய அரசு தன் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தலாம் என, அவை சந்தேகம் எழுப்பியுள்ளன. மேலும், ஆதார் பயனாளிகளின் தகவல் பாதுகாப்பு தொடர்பாகவும் அவை கேள்வி எழுப்பியுள்ளன.