பண மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த விருதுநகர் மாவட்டம் குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த 5ஆம் தேதி அவரை கைது செய்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, நேற்று காலை விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜரானார்.
தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட விசாரணையில், அவரிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்கள் குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: ஸ்டாலின் தான் வாராரு: என நினைத்து “டூப்” ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM