காபூல்: ஆப்கானிஸ்தானில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். இந்நிலையில், ஐ.நா., ஆணையத்தின்கீழ் பணியாற்றி வரும் இரண்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்களை, தலிபான் அமைப்பினர் கைது செய்து, காபூலில் உள்ள சிறையில் அடைத்தனர். அவர்களுடன், ஆப்கன் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்த தகவல் வெளிவந்ததும், பலரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், தலிபான் ஆட்சியாளர்கள் நேற்று விடுதலை செய்தனர்.
இதுகுறித்து, தகவல் துறை துணை அமைச்சர் ஜாபிஹூல்லா முஜாஹித் நேற்று கூறுகையில், “அகதிகளுக்கான ஐ.நா., அமைப்பில் பணியாற்றுவதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், இரண்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், அடையாளங்கள் தெரியவந்ததும், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்,” என்றார்.
Advertisement