உக்ரைனில் பயிற்சி அளித்து வந்த கனேடிய துருப்புகள் அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளது, ரஷ்ய படையெடுப்பை கனடா உறுதி செய்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் பாதுகாப்புத்துறை நிர்வாகம் தெரிவிக்கையில், பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக உக்ரைனில் இருந்த கனேடிய வீரர்கள் தற்காலிகமாக ஐரோப்பாவில் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், எந்த பகுதிக்கு கனேடிய துருப்புகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை பாதுகாப்புத்துறை தெளிவுப்படுத்த மறுத்துள்ளது.
மட்டுமின்றி, பாதுகாப்பு காரணங்களுக்காக எத்தனை இராணுவத்தினர் உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதையும் வெளியிட மறுத்துள்ளனர்.
இருப்பினும், உக்ரைனில் இருந்து துருப்புக்கள் வெளியேற்றப்பட்டுள்ளது, அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்தும் பயிற்சியினை முடித்துக்கொள்வதாகக் கருதமுடியாது என்று பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைன் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அதன் பாதுகாப்புப் படையினரின் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவுவதற்கும் கனடா உறுதியுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.