இல்லதரசிகளுக்கு சூப்பர் நியூஸ்.. இனி சமையல் எண்ணெய் விலை குறையலாம்..!

மத்திய அரசு கச்சா பாமாயில் எண்ணெய் மீதான இறக்குமதி வரியானது 8.25%ல் இருந்து, 5.5% ஆக குறைத்துள்ளது.

தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையானது அதிகமாக இருந்து வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை காரணமாக விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் சுத்திகரிப்பட்ட பாமாயில் எண்ணெய் விலையானது உச்சத்திலேயோ இருந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்நாட்டில் பாமாயில் விலையானது தொடர்ந்து அதிகமாக இருந்து வருகின்றது.

15 ஆண்டுகளுக்கு இப்படித் தான்.. விலை உயர்ந்த எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம்..!

விலை குறையலாம்

விலை குறையலாம்

இதற்கிடையில் நுகர்வோரின் நலைனை கருத்தில் கொண்டு கச்சா பாமாயில் விலையானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை கச்சா பால்ம் ஆயிலின் அடிப்படை சுங்க வரி ஏற்கனவே ஜுரோவாக இருந்தது. இதற்கிடையில் அரசின் வரி குறைப்பு மேற்கொண்டு உற்பத்தியினை பாதிக்கலாம்.

செஸ் வரி

செஸ் வரி

அதேபோல செஸ் வரியினை 7.5% இருந்து 5% ஆக குறைத்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக அரசு வரி குறைப்பினை செய்துள்ளது. சமையல் எண்ணெய் விலை மட்டும் அல்ல, மற்ற சமையல் பொருட்கள் விலையும் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அரசின் இந்த நடவடிக்கையால் மேலும் எண்ணெய் விலை குறையலாம்.

பணவீக்கம்
 

பணவீக்கம்

இதன் மூலம் நுகர்வோர் பணவீக்கமும் கட்டுக்குள் வரும். முன்னதாக நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு இருப்பு வரம்புகளை விதிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த இருப்பு வரம்பானது மார்ச் 31, 2022 வரை பொருந்தும்.

இறக்குமதி அதிகம்

இறக்குமதி அதிகம்

இதன் பிறகு சமையல் எண்ணெய் விலையானது மீண்டும் கட்டுக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியா பெருமளவில் இறக்குமதியையே சார்ந்துள்ள நிலையில், இது மேற்கொண்டு வர்த்தக பற்றாக்குறையும் மிருதுவாக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

govt cuts agri cess on crude palm oil

govt cuts agri cess on crude palm oil/இல்லதரசிகளுக்கு சூப்பர் நியூஸ்.. இனி சமையல் எண்ணெய் விலை குறையும்..!

Story first published: Sunday, February 13, 2022, 11:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.