நடிகர்
ரஜினி
ஐம்பது வருடங்களாக சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். இன்றளவும் இவரது கால்ஷீட் கிடைக்காத என எங்கும் தயாரிப்பாளார்கள் பலர் இருக்கின்றனர். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு வசூல் சாதனையை படைத்து தனக்கான தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் ரஜினி.
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இயக்குனர் கே.பாலச்சந்தரின் பார்வையில் ரஜினி படவே அபூர்வ ராகங்கள் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். முதலில் தன் சினிமா பயணத்தை குணச்சித்திர நடிகராக துவங்கிய ரஜினி பின்பு வில்லனாக பல படங்களில் நடித்தார்.
இதெல்லாம் நடந்ததற்கு காரணம் யார் தெரியுமா ? : தனுஷ்
ஆரம்பத்தில் அனைத்து படங்களிலும் கமலுடன் சேர்ந்து நடித்தார் ரஜினி. பின்பு
கமல்
தன்னுடன் சேர்ந்து நடித்தால் நீ பெரிய ஹீரோவாக வரமுடியாது, தனியே நடி. அப்போதுதான் நீ பெரிய ஹீரோவாக மாறமுடியும் என கமல் ரஜினியிடம் அறிவுறுத்தினார். கமலின் பேச்சைக்கேட்டு ரஜினி தனியாக நடிக்க ஆரம்பித்தார்.
அதிலிருந்து தான் ரஜினி சூப்பர்ஸ்டாராக உருவெடுக்கவும் ஆரம்பித்தார். கமர்ஷியல் படங்களாக தேர்ந்தெடுத்து தன் படங்களின் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையில் நம்மிக்கை பிறக்கும்படியான கதைகளாக நடித்தார் ரஜினி. படிக்காதவன், பணக்காரன்,
அண்ணாமலை
போன்ற படங்கள் அதற்கு சிறந்த உதாரணம்.
ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு அசாதாரணமாக மாறுகிறான் என்ற மையத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பல ரஜினி படங்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் இருக்கின்றது. இந்நிலையில் தற்போது ரஜினி தன் சினிமா வாழ்க்கைப்பற்றி பேசிய வீடியோ சமூகத்தளங்களில் வைரலாகிவருகிறது.
அதில் ரஜினி எனக்கு பெரிய ஹீரோ ஆகணும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அதற்கெல்லாம் நான் ஆசைப்பட்டதுமில்லை. எனக்குன்னு ஒரு வீடு, கார், கொஞ்சம் பணம் இது கிடைத்தால் போதுமென்று தான் நான் இருந்தேன்.
இந்த அளவிற்கு நான் பெரிய ஹீரோவாகி பணம், பேர், புகழ் சம்பாதிப்பேன் என்று நான் நினைத்ததேயில்லை என கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூகத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பெரிய ஹீரோ , சின்ன ஹீரோ என்றெல்லாம் இல்லை , நல்ல படங்கள் பண்ணுவேன் – நடிகை திவ்யபாரதி!