புவனேஸ்வர்:
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள குத்ரா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த பதவிக்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய அவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதுகுறித்து வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 9 வேட்பாளர்களில் 8 பேர் தேர்வை எழுத ஒப்புக் கொண்டனர். அதன்படி அவர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டது.
இதில் அவர்களுக்கு 7 கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களுக்கு பதில் அளிக்க 30 நிமிடம் கொடுக்கப்பட்டது. முதல் 15 நிமிடத்தில் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். அடுத்த 15 நிமிடங்களுக்கு அதே கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பரீட்சையை வேட்பாளர்கள் எழுதினார்கள்.
வேட்பாளர்களுக்கான இந்த பரீட்சை ஏற்பாட்டுக்கு மூளையாக இருந்தவர் பிரதிப் லக்ரா என்ற இளைஞர். அவர் கூறும்போது, ‘வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறிதிகளை கேட்டு கிராம மக்கள் சோர்வடைந்து விட்டனர். அவர்கள் தங்களின் தலைவராக ஆவதற்கு தகுதியானவர்களா என்பதை சோதிக்க முடிவு செய்தனர்.
வேட்பாளர்களுக்கு 5 இலக்குகளை வைத்து கேள்விகள் கேட்கப்பட்டன. நீங்கள் வெற்றிபெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்ன திட்டங்களை செய்வீர்கள். அரசியலில் நுழைவதற்கு நீங்கள் செய்த சமூக நலன்கள் என்னென்ன? தேர்தல் முடிந்ததும் எங்களது வீடுகளுக்கு வருவார்களா? என்பது போன்ற கேள்விகள் அவர்களிடம் கேட்டோம்.
கிராமங்களின் எண்ணிக்கை, வார்டுகளின் எண்ணிக்கை, ஊராட்சி பற்றிய தகவல்கள் போன்ற அடிப்படை தகவல்கள் கேள்விகளாக கேட்கப்பட் டன’ என்றார்.
இதையும் படியுங்கள்…ஹிஜாப் விவகாரம்: பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு – உடுப்பி மாவட்டத்தில் நாளைமுதல் அமல்