விண்ட்சர்:கனடா – அமெரிக்காவை இணைக்கும் பகுதியில் போராட்டக்காரர்கள் குவிந்ததால், பதற்றமான சூழல் நிலவுகிறது.
வட அமெரிக்க நாடான கனடாவில், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.
எதிர்ப்பு
வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத டிரைவர்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்நிலையில் கனடாவின் விண்ட்சர் நகரையும், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரையும் இணைக்கும் மேம்பாலத்தில் போராட்டக்காரர்கள் அதிக அளவில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம்
அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்து போராட்டக்காரர்களை அகற்றினர். அந்த மேம்பாலத்தை தடுப்புகள் வைத்து அடைத்தனர்.எனினும் மேம்பாலத்திற்கு அருகே போராட்டக்காரகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
Advertisement