28 வங்கிகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஏபிஜி ஷிப்யார்டு என்ற கப்பல் கட்டும் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
குஜராத் சூரத் நகரைச் சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் பாரத் ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய தொகையை வேறு நோக்கங்களுக்கு திருப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களிலும் பெரும் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில். ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்திற்குச் சொந்தமான 13 இடங்களில் சிபிஐ நடத்திய சோதனையில் 22 ஆயிரத்து 842 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.