அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பக் கட்சிகள் மக்களாட்சியின் சாரத்தையே மாற்றிவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கன்னோசியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முதற்கட்டத் தேர்தல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
சாதி, மதம் ஆகியற்றின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என உலகில் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் பல தலைமுறையாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பக் கட்சிகள் மக்களாட்சியின் சாரத்தையே மாற்றிவிட்டதாகவும், குடும்பத்தால் குடும்பத்துக்காகக் குடும்பமே நடத்தும் ஆட்சி என்பதே அவர்களின் தாரக மந்திரமாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.